அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா



கரூரில் உள்ள அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடந்த குரு பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு. 2024 -2025-ம் ஆண்டுக்கான குரு பெயர்ச்சி இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள குரு ஸ்தலத்தில் இன்று சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகிறது. நவகிரங்கங்களில் முதன்மையானவருமான குரு பகவானுக்கு வழிபாடு செய்தால், குரு பார்த்தால் கோடி புண்ணியம். குருவை கண்டால் கோடி தோஷம் விலகும் என ஐதீகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், கரூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலத்தில் உள்ள குருவுக்கு இன்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. குரு பெயர்ச்சியால் குறிப்பிட்ட ராசியினர்க்கு நல்ல யோகமும், குறிப்பிட்ட ராசியினர்க்கு மத்திம பலன்களும், குறிப்பிட்ட ராசியினர் பரிகாரம் செய்து கொள்ள வேண்டிய சூழலும் உள்ளதால், பெரும்பாலும் அனைத்து ராசிக்காரர்களும் இன்று குருவை வணங்கி பரிகாரம் செய்து கொண்டனர். இதனால் இன்று கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தனர்.



