தேவாலயங்களில் குருத்துறை ஞாயிறு பவனி

தேவாலயங்களில் குருத்துறை ஞாயிறு பவனி

ஞாயிறு பவனி

மயிலாடுதுறை தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
இயேசு கிறிஸ்து மரித்து, உயிர்த்த நிகழ்வுகளை கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக அனுசரித்து வருகின்றார்கள். இதன் முக்கிய நிகழ்வாக புனித வார முதல் நாளான ஞாயிறு குருத்தோலை ஞாயிறாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு மயிலாடுதுறையில் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது. மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலயத்தில் மறைவட்ட அதிபர் பங்குத்தந்தை தார்சிஸ்ராஜ் அடிகளார் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. மயிலாடுதுறை டி.இ.எல்.சி. பரிசுத்த இம்மானுவேல் தேவாலயத்தில் சபைகுரு ஜெயசீலன் தலைமையில் குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதேபோல், கூறைநாடு புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தலத்தில் குருத்தோலை பவனி பங்குத்தந்தை ஜான் பிரிட்டோ அடிகளார் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து ஆலயத்தில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் தமிழக அன்பிய பணிக்குழு செயலாளர் ஜான்போஸ்கோ அடிகளார் “பிறர் நலம் காக்கும் பெரும் துணிவு வேண்டும்“ என்ற தலைப்பில் மறையுரையாற்றினார். மயிலாடுதுறை தேவாலயங்களில் நடைபெற்ற குருத்தோலை பவனி மற்றும் சிறப்பு பிரார்த்தனை வழிபாட்டு நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் குலுத்தோலைகளை ஏந்தி தாவீதின் மகனுக்கு ஓசான்னா என்ற பாடலை பாடியபடி பங்கேற்றனர்.

Tags

Next Story