புத்தகத் திருவிழாவில் மாணவர்களைக் கவர்ந்த அரங்குகள்

புத்தகத் திருவிழாவில் மாணவர்களைக் கவர்ந்த அரங்குகள்

கண்டு ரசிக்கும் மாணவர்கள்

மயிலாடுதுறையில் 2வது புத்தகத் திருவிழாவில் பல்வேறு அரங்குகள் பெற்றொர்களையும், மாணவர்களையும் வெகுவாக கவர்ந்தது.

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் 2ஆம்தேதி துவங்கிய புத்தக கண்காட்சி வருகின்ற 12ம் தேதி வரை நடைபெறுகிறது. 2ம் நாள் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி, கலந்து கொண்டு “படிப்போம்” “படைப்போம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

80 அரங்குகளில் பல்லாயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிபடுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக மாணவர்கள் பெற்றோர்களை கவர்ந்த பிகைன்ட் எர்த் சேனல் குழுவினரால் அமைக்கப்பட்ட தொலைநோக்கி வழியாக கிரகங்களை கானுதல், பிர்லா கோலரங்கம் போல் சிறிய அளவிலான கோலரங்கம் மூலம் கிரகங்கள் நட்சத்திரங்கள்,

பூமி, நிலா கோல்கள் காட்டப்பட்டது மாணவர்கள் பெற்றோர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வரிசையில் நின்று கண்டு ரசித்தனர். மாணவர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் அரங்கில் செயற்கை நுண்ணறிவு கற்பது குறித்த விழிப்புணர்வு அரங்கமும் மாணவர்களை கவர்ந்தது.

பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

Tags

Next Story