HBDAY-LLLAPPA. பள்ளி மாணவிகளுடன் திமுகவினர் கொண்டாட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை அரசினர் மகளிர் பள்ளியில் மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர வைத்து ட்ரோன் மூலம் பதிவு செய்து ட்ரெண்ட் ஆக்கிய திமுகவினர்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறை அரசினர் மகளிர் பள்ளியில் மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர வைத்து ட்ரோன் மூலம் பதிவு செய்து ட்ரெண்ட் ஆக்கிய திமுகவினர்:- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு அரசினர் மகளிர் பள்ளியில் 250 மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் தட்டுகளை வழங்கிய திமுகவினர், பள்ளி மாணவிகளை "HBD APPA" என்ற எழுத்து வடிவத்தில் அமர வைத்து ட்ரோன் மூலம் பதிவு செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு மயிலாடுதுறையில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் ‌ ஹாப்பி பர்த்டே அப்பா என்ற எழுத்து வடிவில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். மயிலாடுதுறை மாவட்டம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் தமிழக முதலமைச்சர் 72 -வது பிறந்தநாளை முன்னிட்டு‌ மயிலாடுதுறை நகர மன்ற உறுப்பினரும், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளருமான சர்வோதயன் ஏற்பாட்டில் ‌ பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகர மன்ற தலைவர் செல்வராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் ‌ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி பள்ளி மானவிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினர். அப்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பள்ளி மாணவிகள் ஹாப்பி பர்த்டே அப்பா என்று எழுத்து வடிவில் அமர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் இந்நிகழ்ச்சி பார்ப்போரை வியப்படைய செய்தது . இந்நிகழ்ச்சியில் திமுக பொது உறுப்பினர் சிவதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story