பொன்னேரியில் குப்பை எரிப்பு - உடல்நலம் பாதிக்கும் அபாயம்

பொன்னேரியில் குப்பை எரிப்பு - உடல்நலம் பாதிக்கும் அபாயம்

குப்பை எரிப்பு

பொன்னேரியில் குப்பை கழிவுகள் எரியூட்டப்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் இருந்து, தினமும் 10,000 கிலோ குப்பை கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. இவை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், மட்கும், மட்காதவை என தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருவாயற்பாடி, கள்ளுக்கடைமேடு பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரையோரங்களில், குப்பை கழிவுகள் கொட்டி குவிக்கப்பட்டு அவை எரிக்கப்பட்டு வருகின்றன. நாள் முழுதும் எரியும் குப்பை கழிவுகளால், அப்பகுதியே புகைமண்டலமாக இருப்பதுடன், பிளாஸ்டிக் கவர், டயர் உள்ளிட்டவைகளால் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கும், சுகாதார பாதிப்புகளுக்கும் ஆளாகி உள்ளனர். எனவே, குப்பை கழிவுகள் எரியூட்டப்படுவதை தடுக்கவும் அவற்றை முறையாக கையாளவும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story