2008 உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதவி உயர்வு வேண்டும்
கண்டன ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் சுகாதார ஆய்வாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், மக்களைத் தேடி மருத்துவம் திட்ட சுகாதார ஆய்வாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பதிவு உயர்வு அளிக்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சுகாதார பணியாளர்கள் குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் அரசாணை 337, 338 ரத்து செய்ய வேண்டும், சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசி, கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
Next Story