வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி.!
வெங்காயம் விலை உயர்வு
வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெரிய வெங்காயத்தின் விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது. நடப்பாண்டு பெய்ய வேண்டிய பருவ மழை பொய்ததன் காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்துள்ளது.வழக்கமாக பொள்ளாச்சி சந்தைக்கு மகாராஷ்டிரா,நாசிக் போன்ற பகுதிகளில் இருந்து நாட்டு ரக வெங்கயமும் ஆந்திரா,கர்நாடகா போன்ற இடங்களில் இருந்து சிகப்பு நிற பல்லாரி வெங்காயமும் இறக்குமதி செய்யப்படும்.பொள்ளாச்சி சந்தையில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிளை கிராமங்களில் விற்பனை செய்யப்படும்.கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கிலோ ரூபாய் இருபதுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயம் தற்போது விலை உயர்ந்து, ரகத்தை பொறுத்து கிலோ ஒன்றுக்கு ரூபாய் அறுபது முதல் ரூபாய் எண்பது வரை விற்பனையாகிறது.50 கிலோ கொள்ளளவு கொண்ட ஒரு மூட்டை ரூபாய் மூன்றாயிரம் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.இதனால் சில்லறை விற்பனை கடைகளில் ரகத்தை பொறுத்து வெங்காயம் கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக தொண்ணூற்றி ஐந்து ரூபாய் வரை விற்பனையாக ஆகி வருகிறது.பொதுமக்களின் அன்றாட சமையலில் இன்றியமையாததாக உள்ள பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
Next Story