கரூரில் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம்

கரூரில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
கரூரில் 10-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10- அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரபெருமாள் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் ஏ.பி.ஆர் செந்தில், மாவட்ட பொருளாளர் கார்த்திக், மாவட்ட துணை தலைவர் அருண் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், 3- ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள, அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடன் நிரப்பிட வேண்டும், 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள, முழுமையான நிதி ஒதுக்கீட்டினை உடன் வழங்கிட வேண்டும், உங்கள் ஊரில் உங்களை தேடி, மக்களுடன் முதல்வர் மற்றும் மக்களின் முகவரி போன்ற அரசின் திட்ட பணிகளில் அதீத பணி நெருக்கடி அளிக்கப்படுவதை தவிர்த்து, திட்ட பணிகளை செம்மையாக மேற்கொள்ள உரிய கால அவகாசம் மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story