நான் ராகுல் காந்தியாக களம் காண்கிறேன் - காங்கிரஸ் வேட்பாளர் சுதா

நான் ராகுல் காந்தியாக களம் காண்கிறேன் - காங்கிரஸ் வேட்பாளர் சுதா

காங்கிரஸ் வேட்பாளர் சுதா 

நான் உங்கள் முன்பாக ராகுல் காந்தியாக வேட்பாளராக களம் காண்கிறேன், ராகுல்காந்தி தேர்தலில் நிற்பதாக கருதி கை சின்னத்தில் வாக்களியுங்கள் என காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் வேட்பாளர் சுதா தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா கோமல் கிராமத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா அறிமுக கூட்டம் நடைபெற்றது.

திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை அறிமுகப்படுத்தி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிறப்புரையாற்றினார்.

இதில் ஏற்புரை வழங்கிய காங்கிரஸ் வேட்பாளர் சுதா பேசுகையில் என்மீது நம்பிக்கை வைத்து மயிலாடுதுறை வேட்பாளராக ராகுல்காந்தி அனுப்பியுள்ளதால் நான் உங்கள் முன்பாக ராகுல் காந்தியாக வேட்பாளராக களம் காண்கிறேன். அனைவரும் ராகுல்காந்தி தேர்தலில் நிற்பதாக கருதி எனக்கு வாக்குகளை சேகரித்து தரவேண்டும் என்று சிரம்தாழ்ந்து வணங்குவதாக தெரிவித்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்துக்களோடு இங்கு வந்துள்ளேன். அவர் வாழ்த்தை பெற்றவர்கள் எவரும் சோடை போனதில்லை என்பதால் நான் மிகப்பெரிய வெற்றியை பெறுவேன் என்று எனக்கு தெரிந்துவிட்டது. பொருளாதார ரீதியாக இந்திய மக்களை பின்னடைவுக்கு பிரதமர் மோடி தள்ளியுள்ளார். மதரீதியாக பிரித்தாளும் ஆட்சியை மோடி செயல்படுத்தி வருகிறார். மோடி ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனபதற்கு மணீப்பூர் சம்பபவம் உதாரணம். இந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களால் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. தமிழக முதலமைச்சரின் பல்வேறு திட்டங்களால் உலகமே வியந்து பார்கின்றது. பெண்களுக்கு உரிமை தொகை வழங்கி பெண்ணின் வாழ்கையில் விளக்கேற்றி வைத்துள்ளார். என்றார்.

Tags

Next Story