இலட்ச்சிவாக்கம் கிராமம் ஸ்ரீ செங்காளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், இலட்ச்சிவாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலுக்கு கடந்த 1.4.2000 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்,இக்கோவிலை கிராம மக்கள் புணர் அமைத்து புதிய பொலிவுடன் இன்று காலை மகா கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதை முன்னிட்டு வியாழக்கிழமை விநாயகர் பூஜை,அணுக்ஞை, வாஸ்து சாந்தி உள்ளிட்டவை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை கணபதி ஹோமம்,லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம்,புதிய பிம்பங்கள் கிராமத்தில் கரிக்கோலம் வரும் நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றது. இரண்டாம் காலை யாகசாலை பூஜைகள், அஷ்டபந்தனம் சாற்றுதல்,அங்குரார்பணம், நாடி சந்தானம் உள்ளிட்டவை நடைபெற்றது.இன்று காலை யாகசாலை பூஜைகள், ஹோமங்கள்,மகா பூர்ணாகுதி,யாத்ரா தானம் உள்ளிட்டவை நடைபெற்றது.
இதன் பின்னர், கைலாச வாத்தியம்,செண்டை மேளம், மங்கள வாத்தியம் முழங்க, வான வேடிக்கையுடன் புனித நீர் அடங்கிய கலசங்கள் பிரகார புறப்பாடு நடைபெற்றது.காலை 9.30 மணிக்கு ஆலய விமான கோபுரத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதன் பின்னர்,மூலவர் ஸ்ரீ செங்காளம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதன் பின்னர்,மூலவருக்கு மகா அலங்காரம்,மகா தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றது.பின்னர், பக்தர்களுக்கு தீர்த்தம், பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.கோவில் வளாகத்தில் மகா அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மாலை பூக்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் முக்கிய வீதிகளின் வழியாக பிரகார புறப்பாடு நடைபெறுகிறது.நாளை முதல் 48 நாட்கள் மண்டல அபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள்,விழா குழுவினர்கள்,ஊர் பெரியவர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.