முறையற்ற ஏல சீட்டு நிறுவனங்கள்: நா.த.க. ஆட்சியரிடம் மனு

முறையற்ற ஏல சீட்டு நிறுவனங்கள்: நா.த.க. ஆட்சியரிடம் மனு

மனு அளிக்க வந்தவர்கள் 

முறையற்ற ஏல சீட்டு நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

முறையற்ற ஏல சீட்டு நிறுவனங்கள்- நடவடிக்கை எடுக்க நா.த.க. ஆட்சியரிடம் மனு. நாம் தமிழர் கட்சி சார்பில், கரூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் கருப்பையா தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கருப்பையா, கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் தாலுகாவிற்கு உட்பட்ட, காணியாளம்பட்டி, தரகம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள்,

முறையான அனுமதி இன்றி, ஏல சீட்டுகளை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள், மோசடியான நிதி நிறுவனத்தை நம்பி பணத்தைக் கட்டிய பிறகு, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர். பணத்தை திருப்பி கேட்டால் அடியாட்களை வைத்து அடிப்பதும்,

கொலை மிரட்டல் விடுவதும் அன்றாட நிகழ்வாக உள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் இன்று முறையிட வந்ததாக தெரிவித்தார்.

முறையற்ற வணிகம் மேற்கொண்டு வரும் நிதி நிறுவனங்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags

Next Story