சட்டவிரோத மது விற்பனை: இருவர் கைது
சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
சட்டவிரோத மது விற்பனை. இருவர் கைது. 22 குவாட்டர் மது பாட்டில்கள் பறிமுதல். கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி, தாந்தோணி மலை காவல் நிலைய பகுதிகளில் மே 12ஆம் தேதி மதியம் 2 மணியிலிருந்து 3 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, குளத்துப்பாளையம் டாஸ்மாக் பார் அருகே சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட, ராயனூர், நேரு நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி என்பவரையும், இதே போல தாந்தோணிமலை அம்மன் டீ ஸ்டால் அருகே சட்ட விரோத விற்பனையில் ஈடுபட்ட ,மதுரை மாவட்டம், கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் வயது 38 என்பவரையும் கைது செய்து, அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 22 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணி மலை காவல்துறையினர்.
Next Story