சட்டவிரோத மது விற்பனை - பெண் உட்பட 3 பேர் கைது
கரூர் நகர சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த போலீசார் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 25 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் நகர சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமிக்கு தகவல் கிடைத்தது இந்த தகவலின் அடிப்படையில் ஜூன் ஒன்றாம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நகர சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது தாந்தோணி மலை மயானம் அருகே சட்டவிரோதமாக மது விற்ற வரையும், கரூர் வ உ சி தெரு பகவதி அம்மன் கோவில் அருகே விற்பனை செய்தவரையும், வாங்கல் என் புதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் என மூவரை கைது செய்தனர். இதில்,முறையே புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமசாமி, கரூர் வ உ சி தெருவை சேர்ந்த ரெங்கர் என்கிற ரெங்கசாமி, என் புதூரைச் சேர்ந்த இளஞ்சியம் ஆகியோரை கைது செய்து அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 25 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மூன்று பேரையும் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் காவல்துறையினர்.
Next Story