கரூரில், வருமான வரித்துறை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் விளக்கம்

கரூரில்,  வருமான வரித்துறை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் விளக்கம்

நிகழ்ச்சியில் பேசும் ஆணையர்

பகுதி பகுதியாக வருமான வரி செலுத்தினால் தொழில் முனைவோர்களுக்கு சிரமம் இருக்காது என வருமான வரித்துறை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டம் அரங்கில் வருமானவரித்துறை திருச்சி சரக துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் முத்துகிருஷ்ணன்,

சௌந்தரராஜன், மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் ராஜு, செயலாளர் வெங்கட்ராமன், எக்ஸ்போர்ட் அசோசியேசன் தலைவர் அன்பொலி காளியப்பன், வீவிங் நிட்டிங் அசோசியேசன் தலைவர் தனபதி, உணவுத் தொழில் வியாபாரி சங்க தலைவர் லோகநாதன், மற்றும் கரூரில் தொழில் முனைவோர்கள்,

ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வர்த்தகர்கள் வருமான வரி செலுத்துவது தொடர்பான பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர் அதற்கு வருமானவரித்துறை அதிகாரிகள் உரிய பதில் அளித்தனர். நிகழ்ச்சி நிறைவில் சிறப்புரையாற்றிய திருச்சி சரக வருமானவரித்துறை துணை ஆணையர் கருப்பசாமி பாண்டியன் பேசும்போது,

வருமான வரி செலுத்தும் தொழில் முனைவோர்கள் முன்கூட்டியே அந்தந்த வருடத்திற்கு நான்கு பகுதிகளாக 15%, 25%, மீண்டும் 25 சதவீதம், இறுதியாக 100% என முன்கூட்டியே பகுதி பகுதியாக வருமான வரி செலுத்தினால்,

செலுத்துவோருக்கு சிரமம் இருக்காது என தெரிவித்தார். உதாரணமாக 10 லட்ச ரூபாய் வருமானவரி செலுத்த வேண்டியிருந்தால் அதை நான்கு தவணைகளில் பிரித்து செலுத்தும் போது அவர்களுக்கு சிரமம் இருக்காது என்பதை தெளிவு படுத்தினார்.

Tags

Next Story