மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை தேடுதல் பணி தீவிரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை தேடுதல் பணி தீவிரம்

மாவட்ட ஆட்சியர் 

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறுத்தை தேடும் பணி பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது

மயிலாடுதுறை நலத்துக்குடி பகுதியில் சிறுத்தை தென்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதற்கான எந்த ஆதாரமும் அப்பகுதியில் கிடைக்கவில்லை என நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் இன்று தெரிவித்துள்ளார். இருப்பினும் மூன்று கேமராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக பல்வேறு கிராமங்களுக்கு சென்று வனத்துறை பணியாளர்கள் அடங்கிய குழு தகவல்கள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , மேலும் வனப் பணியாளர்கள் வாயிலாக வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டு கிராம மக்களுடன் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தகவல் பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.

சிறுத்தை தென்பட்ட இடங்களான காஞ்சிவாய் , கருப்பூர் மற்றும் எஸ்.புத்துர் ஆகியவற்றை சுற்றி உள்ள ஓடைகளில் கூண்டுகள் மற்றும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எந்த தகவல்களும் கண்காணிப்பு குழுக்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு கால்நடை மருத்துவர்கள் மூலம் பரிசோதனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக உறுதி செய்யப்பட்ட நிலையில் அரியலூர் வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் தொடர்பாக தகவல் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும் , தகவல்களை இரு (மயிலாடுதுறையில் முகாமிட்டுள்ள வனத்துறை - அரியலூர் வனத்துறை) அணியினரும் ‌ ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதாகவும் ,

சிறுத்தையை பிடிக்க இரு அணியினரும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story