இன்னோவா காரில் ஆடுகள் திருட்டு !

X
காவல்
மயிலாடுதுறை அரிசி குத்தாலம் பகுதியில் இன்னோவா காரில் வந்து ஆறு ஆடுகளை கடத்தியவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் பட்ட பகலில் இன்னோவா காரில் வந்தவர்கள் நாயகன் தோட்டம் என்ற பகுதியில் சாலை ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆறு ஆடுகளை பிடித்து காரில் ஏற்றி சென்றனர். ஆட்டின் உரிமையாளர் நாயகன் தோட்டத்தை சேர்ந்த செல்வன் மகன் சினேகன் 33 என்பவர் இந்த காட்சியைப் பார்த்து பதறியடித்து ஓடி வருவதற்குள் அந்த கார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. இது குறித்து சினேகன் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகார் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வீதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து வாகன பதிவு எண்ணை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆடுகளை சைக்கிள் கடத்தியவர்கள் பைக்கில் கடத்தியவர்கள் ஆட்டோவில் கடத்தியவர்கள் மினி வேனில் கடத்தியது போக இன்று இன்னோவா காரில் கடத்திச் சென்றது ஓர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
