பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஆதரித்து செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பு

பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஆதரித்து செல்வப்பெருந்தகை வாக்கு சேகரிப்பு

செல்வ பெருந்தகை பிரச்சாரம்

பொள்ளாச்சியில் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு வாக்குசேகரித்தார்.

பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.

அப்போது இந்த நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை, ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு மோடி ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டிய செல்வப் பெருந்தகை,

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., இந்தியாவில் ஜனநாயக ஆட்சியா? நடக்கிறது சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை, ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது, இந்த நாட்டில் மோடிக்கு ஒரு சட்டம்,

அண்ணாமலைக்கு ஒரு சட்டம், 140 கோடி மக்களுக்கு ஒரு சட்டமா ? என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கச்சத்தீவை புதிதாக வா பேசுகிறீர்கள், இந்திரா காந்தி இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து தன் உயிரை தியாகம் செய்தவர் அவரைப் பேசுவதற்கு மோடிக்கும் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்தார்.. பேட்டி. செல்வபெருந்தகை., மாநிலத் தலைவர் காங்கிரஸ் கமிட்டி..

Tags

Read MoreRead Less
Next Story