பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மக்கள்

பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மக்கள்

பாஜகவில் இணைந்த மாற்றுகட்சியினர்

அதிமுகவும் திமுகவும் பாஜகவிற்கு பயந்து தான் செயல்படுகிறது. பாஜகவின் பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் கார்வேந்தன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவை சேர்ந்த வசந்த ராஜன் போட்டியிடுகிறார் இந்த தொகுதியின் பொறுப்பாளராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கார்வேந்தன் தலைமையில் இன்று அதிமுகவை சேர்ந்த 50.க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தனர்.

அப்போது செய்தியாளரிடம் பேசிய அவர் கொங்கு மண்டலம் என்பது பெரும்பாலும் கொங்கு சமுதாயத்தையும் அருந்ததிய சமுதாயத்தினரையும் சார்ந்த ஒரு தொகுதியாக பொள்ளாச்சி தொகுதி உள்ளது. இங்கு அதிகமாக திட்டு வாங்குவது பாஜகவை சேர்ந்தவர்கள் தான். மற்ற கட்சிகள்., பாஜக எங்களுக்கு போட்டி இல்லை என்றால் நாங்கள் தான் போட்டி என்று அர்த்தம்.

அதிமுகவும் திமுகவும் கூட்டணி வைத்து ஒன்றிணைந்து தான் பாஜகவை எதிர்க்கிறது. இரண்டு கட்சியை சார்ந்தவர்களும் ஒன்றிணைத்து செயல்படுவது பாஜகவின் மோடியும் அண்ணாமலையையும் கண்டு பயந்து தான் என நகைப்புடன் தெரிவித்தார். பேட்டி கார்வேந்தன் (பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முன்னாள் MP)

Tags

Next Story