கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் கல்வெட்டு திறப்பு விழா

கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது.

கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டு திறப்பு விழா நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ஜவகர்பஜார் பகுதியில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே, கரூர் மாவட்ட சுதந்திரப் போராட்ட தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டுகள் திறப்பு விழா, கரூர் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகள் சங்கத்தின் தலைவர் அவிநாசிலிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைத் தலைவர் வழக்கறிஞர் ராஜேந்திரன், சங்கத்தின் ஆலோசகர் காமராஜ், அமைப்பு செயலாளர் ஓம் சக்தி சேகர், செயலாளர் ராஜப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில், கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் பெயர் பொறித்த கல்வெட்டுகளை திறந்து வைத்து, மறைந்த சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை போற்றி, பாராட்டி பேசினார்.

Tags

Next Story