காங்கிரஸ் கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் அடுத்த தாந்தோனிமலை முருகன் கோவில் பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது.

தமிழகத்தில் கோடை வெயில், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து கொளுத்தி வருகிறது. நாளை அக்னி நட்சத்திரம் துவங்க உள்ளது. இந்நிலையில் நேற்று கரூர் மாவட்டத்தில் 112° வரை வெயில் வாட்டி வதைத்தது பொதுமக்கள் இந்த கோடையில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக, பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தன்னார்வலர்கள் ஆங்காங்கே நீர் மோர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையில் இன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பேங்க் சுப்பிரமணி தலைமையில், கரூர் அடுத்த தாந்தோனிமலை முருகன் கோவில் பகுதியில் இன்று நீர் மோர் பந்தல் துவக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் சின்னையன், மாவட்ட செயலாளர் திருக்காம்புலியூர் சேகர், வட்டார தலைவர் ராஜேந்திரன் மற்றும் விசுவை செந்தில், முன்னாள் நகர் மன்ற தலைவர் சுப்பன், காங்கிரஸ் கட்சியின் தகவல் அறியும் உரிமைச் சட்ட மாநில பொதுச் செயலாளர் மனோகரன், மாநில மாணவரணி பொதுச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு அப்பகுதி பொது மக்களுக்கு தர்பூசணி, மோர், நீர் ஆகியவற்றை வழங்கினர்.

Tags

Next Story