சாலை பாதுகாப்பு மாத விழிப்புணர்வு பேரணி துவக்கம்

சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு கரூரில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகளும் அதற்கு இணையாக அதிகரித்து வருகிறது. இதனை குறைக்கும் விதமாக வருடம் தோறும் சாலை பாதுகாப்பு வார விழாவை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி வந்தது. தற்போது அதனை சாலை பாதுகாப்பு மாத விழாவாக இந்த வருடத்தில் இருந்து உருவாக்கி உள்ளது. இதன் அடிப்படையில் கரூர் தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில், கரூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வடிவேல் விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

கரூர் தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன், சட்ட ஒழுங்கு ஆய்வாளர், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் கலந்து கொண்டனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் 20 மோட்டார் வாகனங்களிலும், மற்றும் தீயணைப்பு வாகனங்களும் இந்த பேரணியில் பங்கேற்றது. தீயணைப்பு நிலையத்திலிருந்து துவங்கப்பட்ட இந்த பேரணி, கோவை சாலையில் உள்ள திருக்காம்புலியூர் சென்று மீண்டும் பேருந்து நிலையம் வழியாக திண்ணப்பா கார்னர்,அரசு மருத்துவமனை, ஜவஹர் பஜார் வழியாக சென்று மீண்டும் தீயணைப்பு நிலையத்தை வந்தடைந்தது. இந்த பேரணியின் போது,சாலை பாதுகாப்பை வலியுறுத்தி பல்வேறு வாசகங்களை ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவித்தவாறு சென்றனர்.

Tags

Next Story