இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம்
இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இப்தார் நோன்புடன் துவங்கியது.
இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் இப்தார் நோன்புடன் துவங்கியது.
திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் பங்கேற்று மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்:- மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் இன்னமும் முடிவு செய்யப்படாத நிலையில், மயிலாடுதுறை மக்களவைத் தேர்தல் பணிகள் குறித்த திமுக தலைமையிலான கூட்டணி கட்சியின் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளர் நிவேதா எம்.முருகன் எம் எல் ஏ தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய, திமுக ஆட்சியில் உள்ள பல சாதனைகளை மக்களிடையே எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க மாவட்டமற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றும் திராவிட இயக்கத்தினர் இஸ்லாமியர்கள் உட்பட திமுக கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். முன்னதாக ரம்ஜான் மாதத்தை ஒட்டி நடத்தப்பட்ட சிறப்பு இப்தார் நோன்பில் சமுதாய நல்லிணகத்தை உணர்த்தும் விதமாக அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Next Story