இந்தியாவே மோடி ஆட்சியை வேண்டாம் என சொல்கிறது - கி.வீரமணி

இந்தியாவே மோடி ஆட்சியை வேண்டாம் என சொல்கிறது  - கி.வீரமணி

பிரசார பொதுக்கூட்டம் 

தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் மோடியின் ஆட்சி வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால்தான் அவர்கள் கோபத்துடனும், வெறுப்பு அரசியலையும் பேசி வருகின்றனர்.ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின், உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.

மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து திராவிடர் கழகம் சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைவர் கீ. வீரமணி ககலந்து கொண்டு கைசின்னத்திற்கு வாக்கு கேட்டு பேசுகையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அரசியல் வியூகத்தால் இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டதன் காரணத்தால்தான், இன்று பிரதமர் மோடி அடிக்கடி தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கிறார். தமிழகம் மட்டுமல்ல நாடு முழுவதும் மோடியின் ஆட்சி வேண்டாம் என்று சொல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அவர்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது. அதனால்தான் அவர்கள் கோபத்துடனும், வெறுப்பு அரசியலையும் பேசி வருகின்றனர்.

இண்டியா கூட்டணியின் நோக்கம் நல்லாட்சியை தருவதாகும். பிரதமர் மோடி சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்பதில்லை. ஊழலை ஒழிப்பேன் என்று சொல்பவர்களின், உலக மகா ஊழலாக தேர்தல் பத்திர முறைகேடு அமைந்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற தேர்தல்களை விட இது வித்தியாசமானது. வேட்பாளர்களிடையே, கட்சிகளிடயே போட்டி என்பதை விட இரண்டு கொள்கைகளுக்கிடையேன தேர்தல். ஜனநாயகமா? எதேச்சதிகாரமா?. தொடர்ந்து இது போன்று தேர்தல் நடக்க வேண்டுமா? இதுவே கடைசி தேர்தலாக இருக்க வேண்டுமா? தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஜனநாயகத்தை காப்பாற்றக் கூடிய, அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லக் கூடிய அணி இது. அதனால் மக்கள் இண்டியா கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவிற்கு வாக்களிக்க வேண்டும் என்ற கூறினார்.

Tags

Next Story