இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாடினர். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்டம். நேதாஜி என்று அன்போடு அழைக்கப்படும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி பிறந்தார். இவர்,இந்திய சுதந்திரப் போராட்ட தலைவர் ஆவார். இவர் இரண்டாம் உலகப் போரின் போது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி விமான விபத்தில் இறந்ததாக கூறப்படுகிறது. இந்தியா உடனடியாக சுதந்திரம் அடைய வேண்டும் என்றால் போர் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்கும் என முடிவு செய்து, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் தாங்கி போர் புரிந்தார். இதனால் அவர் இன்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய பிறந்தநாளில், கரூர் ஜவஹர் பஜார் பகுதியில், காமராஜர் சிலை முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர்கள் தூவி அவரது பிறந்த நாளை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கரூர் மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட துணை தலைவர் கணேசன், இளைஞர் அணி மாவட்ட தலைவர் கார்த்திகேயன் மற்றும் செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்.

Tags

Next Story