மயிலாடுதுறை அருகே அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாநாடு

மயிலாடுதுறை அருகே அரசு கலைக் கல்லூரியில் இந்திய மாணவர் சங்க மாநாடு

மயிலாடுதுறை அருகே நடந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநாட்டில், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மயிலாடுதுறை அருகே நடந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாநாட்டில், கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.

மயிலாடுதுறை அருகே மணல்மேடு பகுதியில் இந்திய மாணவர் சங்கத்தின் 3 வது கிளை மாநாடு இன்று நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கிஷோர் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அரவிந்தசாமி மற்றும் மாநிலத் துணைத் தலைவர் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கல்லூரியில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும் , கல்லூரியின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி பேருந்து நிறுத்தம் அரசு சார்பில் அமைத்திட வேண்டும். 2024 - 25 கல்வியாண்டில் முதல் நிலை வணிக மேலாண்மை பாடப் பிரிவினை சேர்த்து துவக்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story