பொள்ளாச்சி அருகே சோதனை சாவடியில் மோப்ப நாய் பைரவா உதவியுடன் சோதனை
மோப்ப நாய் உதவியுடன் சோதனை
பொள்ளாச்சி அருகே சோதனை சாவடியில் மோப்ப நாய் பைரவா உதவியுடன் சோதனை செய்தனர்.
போதை பொருட்கள் பயன்பாடு எதிரொலி மற்றும் வன குற்ற சம்பவங்களை தடுக்கம் நடவடிக்கையாக கோவை மண்டல தலைமை பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் வனத்துறையினர் பொள்ளாச்சி ஆழியார் வனத்துறை சோதனைச் சாவடியில் மோப்பநாய் பைரவா உதவியுடன் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறைனர்.. பொள்ளாச்சி.. ஜூலை..04 தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போதை பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 50.க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் பொள்ளாச்சி அருகேவும் இருவர் மது குடித்து உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நிலை சரியில்லாமல் போனது என வதந்திகள் பரவி வந்தன.. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சாலையில் ஆழியார் பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடியில் கோவை மண்டல தலைமை வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் ஞான பாலமுருகன் தலைமையில், வனத்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். வன குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாகவும்,வனத்தின் பாதுகாப்பு கருதியும் வனத்துறையினர் பைரவா என்ற மோப்பநாய் மூலம் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் இன்று வனத்துறையினர் ஆழியார் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை மேற்கொண்டு சுற்றுலா பயணிகளிடம் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள்,போதை ஊசி போன்றவை உள்ளதா என முழு சோதனைக்குப் பிறகு படுவதாக ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி வனச்சரகர் ஞான பாலமுருகன் தெரிவித்துள்ளார்.. ம.சக்திவேல் .பொள்ளாச்சி..9976761649..
Next Story