மயிலாடுதுறை : சர்வதேச சிறுதானிய ஆண்டு உணவு திருவிழா
சிறுதானிய உணவு திருவிழா
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சர்வதேச சிறுதானிய ஆண்டு உணவு திருவிழாவை மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தொடங்கி வைத்து, சிறப்பாக சிறுதானிய கண்காட்சி அமைத்தவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது: நம் முன்னோர்கள் சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக் கொண்டதன் காரணமாக நோய், நொடிகள் இல்லாமல் வாழ்ந்தனர். உணவே மருந்து என வாழ்ந்தனர். நாமும் நம் முன்னோர்களின் வழியில் மீண்டும் பழைய உணவு முறைகளை பின்பற்றி சிறுதானிய உணவுகளை பயன்படுத்துவோம்.
சிறுதானியங்களின் நன்மைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசானது இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டதன் அடிப்படையில், தொடர்ந்து, இன்றைய தினம் சர்வதேவச சிறுதானிய உணவு திருவிழா நடத்தப்படுகிறது. சிறுதானிய உணவுகளை எடுத்துக்கொள்வதன் விளைவாக நீரிழவு நோய், புரதச்சத்து, இரும்புச்சத்து குறைபாடு, இதயம் சம்பந்தமான நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை நாம் தடுக்கலாம்.
எனவே, சிறுதானியங்களின் நன்மைகளையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சிறப்பாக சிறுதானிய உணவு கண்காட்சி அமைத்தவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வழங்கல் அலுவலர் பானுகோபன், வேளாண்மைத்துறை இணை இயக்குனர் சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.