உலக மகளிர் தினம் - மாரத்தானில் வென்றவர்களுக்கு பிஜேபி சார்பில் பரிசு
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாரத்தானில் வென்றவர்களுக்கு பிஜேபி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பாரத பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நல்லாட்சியை விளக்கி கூறும் வகையில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி சார்பில் மினி மாரத்தான் போட்டி இன்று கரூர் திண்ணப்பா தியேட்டர் முதல் கோவை சாலையில் உள்ள பிரேம் மகால் வரை நடைபெற்றது. இந்த போட்டியில் ஏராளமான மகளிர் கலந்து கொண்டு தங்களது திறன்களை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மகளிர்க்கு, பிரேம் மஹாலில் கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு செந்தில்நாதன் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மகளிர் அணி மாநில துணைத்தலைவர் மீனா, மகளிர் அணி மாவட்ட தலைவர் பிரியா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த மாவட்ட அளவிலான மகளிர் அணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பரிசளிப்பு விழாவை சிறப்பித்தனர்.
Next Story