வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம்
யோகா செய்து அசத்திய மாணவர்கள்
வெண்ணைமலை சேரன் பள்ளியில் சர்வதேச யோகா தின விழா கொண்டாட்டம். ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பங்கேற்பு. கரூர் அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,
இன்று சர்வதேச யோக தின விழாவை முன்னிட்டு பள்ளியின் முதல்வர் பழனியப்பன் தலைமையில் பள்ளி வளாகத்தில் யோகா தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதன் பலன்களை மருத்துவர் மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகப் பயிற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
மேலும், இதனை நாள்தோறும் செய்து உடல்நலம் மற்றும் மனநலத்தை பேணிக்காக்குமாறு மாணாக்கர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் பாண்டியன் யோகாவின் முக்கியத்துவங்கள் குறித்து விளக்கி பேசி, மாணவர்கள் தொடர்ந்து அதனை கடைபிடிக்க வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பயிலும் சுமார் 3000க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், சக்கராசனம், புஜங்காசனம்,
சர்வங்காசனம், பத்மாசனம், சிரசாசனம் போன்ற பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டி அனைவரையும் பரவசப்படுத்தினர். யோகா ஆசிரியர் யமுனாதேவி வழிகாட்டுதலின் பேரில் இந்த யோக பயிற்சியை மாணாக்கர்கள் நேர்த்தியாக செய்து காண்பித்தனர்.
இந்த விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மற்றும் மாணாக்கர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இறுதியில் பள்ளியின் துணை முதல்வர் பேபி அனைவருக்கும் நன்றி கூற, விழா இனிதே நிறைவு பெற்றது.