மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கல்

மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கல்

வெற்றி சான்றிதழ் வழங்கல் 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வழக்கறிஞர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து 10,88,182 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகள்,

பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகள், நாம் தமிழர் வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகள் பெற்று, அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். 8,695 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு,

தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி.மகாபாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏக்கள் நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜகுமார், எம்பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து,

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா, அமைச்சர் உள்ளிட்ட திமுக மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் வாகனங்களில் பேரணியாக சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story