காலை 9 மணி வரை பெய்த பனி

காலை 9 மணி வரை பெய்த பனி

பனி மூட்டம் 

மயிலாடுதுறை பகுதியில் விடிய விடிய நிலவிய பனி மூட்டம் காலை 9 மணி வரை தொடர்ந்தது.
மார்கழியின் கடைசி நாளும் போகி பண்டிகையுமான இன்று விடிய விடிய பெய்த பனி, காலை 9 மணி வரை நீடித்தது. இதனால் போக்குவரத்து வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்ட படியே சென்றனர் வழக்கமாக செல்லும் வேகத்தை விட குறைந்த வேகத்திலேயே சென்றனர் பனி அதிகமாக இருந்ததால் காலை நேரத்தில் பொதுமக்களின் பணியானது பாதிக்கப்பட்டது, சென்னை, கோவை, மதுரை ,திருப்பூர் போன்ற பகுதிகளிலிருந்து பொங்கல் விடுமுறைக்காக மயிலாடுதுறை வரும் பயணிகள் பேருந்து வழக்கத்தை விட ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்தது. தற்பொழுது அறுவடை பணிகள் துவங்கியுள்ளதால் விவசாயத்திற்கு இன்றைய பனி பாதிப்பை ஏற்படுத்தாது வழக்கமாக இன்று தேவையில்லாத குப்பைகளை கொளுத்தும் போகிப் பண்டிகையை முன்னிட்டு ஒரு சில இடங்களில் காலை நேரத்தில் குப்பைகளை கொளுத்தினாலும் அளவுக்கு அதிகமாக பனியே நிறைந்து காணப்பட்டது.

Tags

Next Story