காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழா.

காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழா.

முத்துமாரியம்மன் திருவிழா

காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழா.
காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. அருள்மிகு முத்துமாரியம்மன் திருவிழா. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பகவதி அம்மன் திருவிழா இன்று துவங்குகிறது. முதல் நாள் நிகழ்ச்சியாக கம்பம் போடும் நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கம்பத்தை, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள அமராவதி ஆற்றுக்கு எடுத்துச் சென்று, கரகம் பாலித்து பின்னர் அங்கு இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக இன்று இரவு எடுத்து வந்து கோவிலில் கம்பத்தை நட்டு வைப்பார்கள். இதனைத் தொடர்ந்து பக்தர்கள் நாள்தோறும் அதற்கு புனித நீரை ஊற்றி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் பக்தர்கள். இந்த நிகழ்ச்சிக்காக இன்று அமராவதி ஆற்றுக்குச் செல்லும் முன்பு ஊர் கொத்துக்காரர் மற்றும் விழா கமிட்டியினர்க்கு கோவில் வளாகத்தில் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. காப்பு கட்டிய பிறகு அமராவதி ஆற்றுக்கு மேளதாளங்களுடன் கம்பத்தை எடுத்து வர சென்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் நடைபெறும்.மேலும், பல்வேறு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதில் ஏப்ரல் 5-ம் தேதி பூச்சொரிதல் விழாவும், ஏப்ரல் 9-ம் தேதி பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சியும், ஏப்ரல் 11-ம் தேதி கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story