மேள வாத்தியங்கள் முழங்க காளியாட்டவிழா

மேள வாத்தியங்கள் முழங்க காளியாட்டவிழா

காளியாட்டவிழா

மயிலாடுதுறையில் ஜடாமுடி அய்யனார் ஆலய பால்குட திருவிழா, மேள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற காளியாட்டத்தை வியந்து பார்த்த பக்தர்கள்
மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி பகுதியில் ஸ்ரீ ஜடாமுடி அய்யனார் , ஸ்ரீ முன்னடையான் , ஸ்ரீ நாகாத்தம்மாள் மற்றும் பேச்சியம்மாள் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஒன்பதாம் ஆண்டு பால்குட திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு விரதம் இருந்த பக்தர்கள் காவிரி துலா கட்டத்தில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் ‌. முன்னதாக பச்சை காளி மற்றும் பவளக்காளி உள்ளிட்ட வேடமனிந்து கலைஞர்கள் நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பாலினை கொண்டு சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story