மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்ட வனக்காவலர் விரக்தியில் தற்கொலை

தாந்தோணி மலை அருகே மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்ட வனக்காவலர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

தாந்தோணி மலை அருகே மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்ட வனக்காவலர் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. சிவகங்கை மாவட்டம், கோட்டக்குடி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ஜேசுதாஸ் வயது 32. இவரது மனைவி ஆரோக்கிய பேபி என்கிற சத்யா வயது 35. ஜேசுதாஸ் தற்போது கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, பூங்கா நகர், அமர் சத்யா இல்லம் பகுதியில் தனியாக தங்கி வனக்காவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, இதற்காக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள, உள்ள சிவசங்கர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் விரக்தி அடைந்த ஜேசுதாஸ், ஜனவரி 29ஆம் தேதி மதியம் 1:30 மணியிலிருந்து மறுநாள் அதிகாலை 4.30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த அக்கம் பக்கத்தினர், அவரது மனைவி ஆரோக்கிய பேபி என்கிற சத்யாவுக்கு தகவல் அளித்தனர்.

உடனடியாக கரூருக்கு வந்த அவர், இது தொடர்பாக தாந்தோணி மலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த ஜேசுதாஸின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தாந்தோணிமலை காவல்துறையினர்.

Tags

Next Story