பெரியபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை,வெள்ளி,பணம் கொள்ளை!

பெரியபாளையம் அருகே கோவில் பூட்டை உடைத்து நகை,வெள்ளி,பணம் கொள்ளை!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.


திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் உள்ள கோவில் பூட்டை உடைத்து நகை, வெள்ளி, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ மதுசுந்தரநாயகி உடனுறை ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அமைந்திருக்கும் இடத்தில் வெறும் சிவலிங்கம் மட்டும் இருந்து வந்த நிலையில் கிராம மக்களின் பங்களிப்புடன் புதிய கோவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த (11.02.2024) அன்று மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.

இந்த நிலையில் இந்தக் கோவிலில் அண்ணாமலை (வயது 52) என்பவர் பூசாரிகளாக உள்ளார் இவர் நேற்று வழக்கம்போல் கோவிலைத் திறந்து பூஜை செய்து மாலை கோவிலை கூட்டிக்கொண்டு வீடு சென்றார். இந்தக் கோவில் சுற்றி அப்பகுதி விவசாயிகள் விளைநிலங்களில் பூக்கள் உள்ளிட்டவை பயிரிட்டு வருகின்றனர். இன்று அதிகாலை பூக்களை பறிக்க வழியாக சென்ற விவசாயிகள் கோவில் பூட்டை உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பெரியபாளையம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டை உடைக்கப்பட்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டு இருந்த ஒன்றரை சவரன் மதிக்கத்தக்க இரண்டு தங்கதாலிகள்,1/2 கிலோ வெள்ளி கொலுசு, கண்மலர் காப்பு உள்ளிட்ட பொருட்களும் பக்தர்கள் உண்டியல் செலுத்திய தொகை ரூ.10ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பின்னர் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரிக்கப்பட்டு அங்கு வந்த மோப்பநாய் ராக்ஷி சுமார் ஒரு கிலோமீட்டர் அளவிற்கு சென்று நின்றது. மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த மாதம் இதே கிராமம் ஏரி கரை அருகே உள்ள செல்லியம்மன் மற்றும் செவிட்டு செல்லியம்மன் கோவில்களில் அடுத்தடுத்து கோவில்களில் பூட்டை உடைத்து கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. மேலும் கும்பாபிஷேகம் முடிந்து மூன்று மாத காலங்களில் மூன்றாவது கோவிலில் திருட்டு போல சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story