கரூர் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி அறிவிப்பு.

கரூர் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக சிட்டிங் எம்.பி ஜோதிமணி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கரூர் நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டு வருபவர் செல்வி ஜோதிமணி. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார். கடந்த தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரைக்கு எதிராக சுமார் 4 லட்சத்து 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மீண்டும் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட முனைப்பு காட்டி வந்தார்.

ஆனால் கரூர் மாவட்ட திமுகவினர் உடன் ஜோதிமணிக்கு ஏற்பட்ட அரசியல் பூசல் காரணமாக திமுகவினர் ஜோதி மணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது எனவும், காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களும் ஜோதிமணிக்கு எதிராக தீர்மானங்கள் இயற்றியதும் குறிப்பிடத்தக்கது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, மீண்டும் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜோதிமணி என அறிவித்துள்ளார். அறிவிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதி மணிக்கு, அவரது ஆதரவாளர்கள் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story