மணமகள் படத்திற்கு கதை வசனம் 1951ல் கலைஞருக்கு கார் பரிசு

மயிலாடுதுறையில்  டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழா புகைப்பட கண்காட்சி  ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்   

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி கலையரங்கத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா புகைப்பட கண்காட்சி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த கண்காட்சியில், கலைஞரின் குழந்தை பருவம் முதல் இறுதி நாட்கள் வரை எடுக்கப்பட்ட சுமார் 10,000 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்த கண்காட்சியை திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

கலைஞரின் கல்லக்குடி ரயில் மறியல் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் புகைப் படங்கள், கலைஞரின் சிறுவயது புகைப்படங்கள், குடும்பத்தினருடன் உள்ள புகைப்படங்கள், முன்னாள் ஜனாதிபதிகள், முன்னாள் பிரதமர், மந்திரிகள், பல்வேறு மாநில அரசியல் கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தலைவர்கள், அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் ஆகியோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள். குறிப்பாக 1951ல் மணமகள் திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதிய கலைஞருக்கு கலைவாணர் பரிசளித்த காரின் முன்பு கலைஞரும் அண்ணாவும் அமர்ந்திருந்த காட்சி இதுவரை பார்த்திராத கேட்டிறாத அறிய புகைப்படத்தை கண்டு வியந்தனர். அதிக புகைப்படங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

இதில் மயிலாடுதுறை எம்.பி., சுதா, எம்எல்ஏக்கள் நிவேதா முருகன், ராஜகுமார், முன்னாள் எம்பி ராமலிங்கம், திமுக கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இக்கண்காட்சியில் 1924-ம் ஆண்டு முதல் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடர்புடைய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. அனைவரும் இதனை பார்வையிட வேண்டும். 22-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி அரங்கம் திறக்கப்பட்டிருக்கும்" என்றார்.

Tags

Next Story