காமாட்சி அம்மன் ஆலய பங்குனி உத்திரம் பால்குட காவடி

காமாட்சி அம்மன் ஆலய  பங்குனி உத்திரம் பால்குட காவடி

மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பால்குடம் காவடி மஹோற்சவ விழா நடந்தது.


மயிலாடுதுறை கீழ நாஞ்சில்நாட்டில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தின் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு பால்குடம் காவடி மஹோற்சவ விழா நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை டவுன் கீழ நாஞ்சில் நாடு பகுதியில் ஸ்ரீ சியாமளா வல்லி தாயார், ஸ்ரீ தங்க முனீஸ்வரர், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் ஒரே ஆலயத்தில் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலித்து வருகின்றனர். இவ்வாலயத்தின் பங்குனி மாத பால்குடம் காவடி மஹோற்சவம் கடந்த 15ஆம் தேதி காப்பு கட்டி துவங்கப்பட்டது.

முக்கிய நிகழ்வான பால்குடம் காவடி திருவிழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு தருமபுரம் காவிரி ஆற்றங்கரையில் இருந்து பால்குடம் காவடி மேளதாளம் வாத்தியங்கள் பம்பை வாத்தியங்கள் முழங்க புறப்பட்டு வீதி உலாவாக ஆலயம் வந்தடைந்தது. ஆலயத்தின் முன்பு பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆடியது பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

காவடி எடுத்தவர்கள் ஸ்ரீ தங்க முனீஸ்வரர் ஆலயம் முன்பு நாக்கில் அழகு குத்தி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து ஆலயத்தில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தலையில் சுமந்து வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கோயிலில் அர்ச்சனை செய்து மாவிளக்கு இட்டு வழிபாடு நடத்தினர். .

Tags

Next Story