தரைக் கடையில் காய்கறி வியாபாரம் செய்து வாக்குகளை சேகரித்த பாஜக வேட்பாளர்

தரைக் கடையில் காய்கறி வியாபாரம் செய்து வாக்குகளை சேகரித்த பாஜக வேட்பாளர்
பிரச்சாரம்
கரூர் நாடாளுமன்ற பாஜக வேட்பாளர்தனது ஆதரவாளர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகிறார்.
நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தில்நாதன். இன்று கரூர் நகரப் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். செல்லும் வழி எங்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு தெரிவித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். அப்போது அப்பகுதியில் தரைக்கடையில் காய்கறி வியாபாரம் நடைபெற்று வந்தது. இதனை கவனித்த வேட்பாளர் செந்தில்நாதன் கடைக்காரர்களிடம் சென்று தனக்கு தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பின்னர், சிறிது நேரம் அந்த தரைக்கடையில் அமர்ந்து காய்கறி வியாபாரம் செய்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story