கரூர் மாவட்டத்தில் 137.40 மில்லி மீட்டர் மழை பதிவு
ஆந்திராவின் தெற்கு கடலோரம் மற்றும் அதை ஒட்டிய தமிழக வடக்கு கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கில் சுழற்சியை நிலவுவதால், தமிழக முழுவதும் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவித்தது. இதன் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது.
அதன்படி கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக கரூரில் 58.2மி.மீ. க.பரமத்தியில் 3.4.மி.மீ, குளித்தலையில் 19.6 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.6 மில்லி மீட்டரும், மாயனூரில் 10 மில்லி மீட்டர் ,பஞ்சபட்டியில் 5 மில்லி மீட்டர், கடவூரில் 7- மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 20 மில்லி மீட்டர், மைலம்பட்டியில் 8.6 மில்லி மீட்டர் என மொத்தம் 137.40 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும்,இதனுடைய சராசரி அளவு 11.45 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.