கரூர் மாவட்டத்தில் 16.30 மில்லி மீட்டர் மழை பதிவு

X
மழை
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் ஒரிறு இடங்களில் கன மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் நேற்று பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி அரவக்குறிச்சியில் 4-மில்லி மீட்டர், அணை பாளையத்தில் 5.2 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 1.4 மில்லி மீட்டர், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர், பாலவிடுதியில் 2.2 மில்லி மீட்டர் மயிலம்பட்டியில் 2.5 மில்லி மீட்டர் என மொத்தம் 16.30- மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 1.36- மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.
Next Story
