கரூர் மாவட்டத்தில் 231 மில்லி மீட்டர் மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 மில்லி மீட்டர் மழை பதிவானதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து வரும் கோடை வெப்பத்தால் பூமியே கொதித்து விட்டது. அந்த அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றதால், பொதுமக்கள் நாள்தோறும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் கோடை வெப்பத்திற்கு ஏற்றவாறு அதிக அளவில் மழை பெய்யும் என வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது.

கரூர் மாவட்டத்தில் மே 18, 19 ஆகிய இரு தினங்களில் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. ஆனால் அதற்கு மாறாக மே 20, 21 ஆம் தேதிகளில் கரூர் மாவட்டத்தில் பரவலாக கன மழை பெய்தது. இதன் அடிப்படையில் நேற்று மே 21ஆம் தேதி பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

அதன்படி கரூரில் 42 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 16.4m, அணைப்பாளையத்தில் 34.4,க. பரமத்தியில் 24.6 மில்லி மீட்டரும், குளித்தலையில் 17 மில்லி மீட்டரும், தோகைமலையில் 15.4 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 9.0 மில்லி மீட்டர், மாயனூரில் 12, பஞ்சபட்டியில் 4.2, மில்லி மீட்டரும், கடவூரில் 20 மில்லி மீட்டர், பாலவிடுதியில் 31 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 5 மில்லி மீட்டர் என மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் 231 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடைய சராசரி அளவு 19.25 மில்லி மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story