கரூர் மாவட்டத்தில் 89 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு

கரூரில் மழை


கரூர் மாவட்டத்தில் நேற்று 89 மில்லி மீட்டர் மழை பெய்ததாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று காலை முதலே கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் சூழ்ந்து ஆங்காங்கே மழை பெய்தது. மீண்டும் நேற்று இரவு பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பெய்த மழை அளவு குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சியில் 4.8 மில்லி மீட்டரும், க. பரமத்தியில் அதிகபட்சமாக 27 மில்லி மீட்டரும், குளித்தலையில் 21 மில்லி மீட்டரும், தோகை மலையில் 4 மில்லி மீட்டரும், பஞ்சபட்டியில் 23 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 4.2 மில்லி மீட்டரும், மைலம்பட்டியில் 5 மில்லி மீட்டர் என மொத்தம் 89- மில்லிமீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 7.42 மில்லி மீட்டர் ஆகும்.
Next Story



