கரூர் : விவசாயிகள் குறைதீர் கூட்டம்

X
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, அதை தீர்த்து வைப்பதற்காக மாதம் தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். அதன் அடிப்படையில், இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், பல்வேறு துறை ரீதியான அதிகாரிகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகள், பொதுமக்கள், அவரவர் வசிக்கும் பகுதியில் உள்ள குறைகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். பொதுமக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஒலிபேசியில் அழைத்து, விளக்கம் கேட்டு, பிறகு குறைகள் தெரிவித்த நபரின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Tags
Next Story
