ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல மாறிய கரூர்
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல மாறிய கரூர் மாவட்டம்.
தமிழகத்தில் தொடர்ந்து பருவமழை தீவிரமடைந்து, தமிழகம் முழுவதும் சில இடங்களில் மிக பலத்த மழையும், பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பருவ கால மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம், கரூர் மாவட்டம் அதிகப்படியான வெயில் அடிக்கும் மாவட்டமாக பல வருடங்களாக இருந்து வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள பருவ கால மாற்றம் கரூரையும் விட்டு வைக்கவில்லை. இன்று காலை முதலே இதமான சாரல் மழையுடனும், மேகமூட்டத்துடனும், கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களில் இருப்பது போன்ற ஒரு சூழல் நிலவுகிறது. பொதுமக்கள் இந்த அனுபவத்தை வித்தியாசமாக அனுபவித்து, உணர்ந்து பரவசமடைந்துள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன், குளிர்ச்சியான நிலை காணப்படுவதால், பெரும்பாலானோர் காலை 10-மணி ஆன பிறகும் ஸ்வட்டர், ஜெர்கின் போன்ற பாதுகாப்பு உடைகளை அணிந்து தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.