கரூர்:கொட்டி தீர்த்த கனமழை, 23 செ.மீ பதிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கரூர்:கொட்டி தீர்த்த கனமழை, 23 செ.மீ பதிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கனமழை

கரூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. 234.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே சென்னை வானிலை மையம் தமிழகத்தில் குறிப்பிட்ட இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் நேற்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 38 மில்லி மீட்டரும், அரவக்குறிச்சியில் 16.2.மி.மீ, அணைப்பாளையத்தில் 12மி.மீ, க. பரமத்தியில் 10 மில்லி மீட்டரும், குளித்தலையில் 7.மி.மீ, தோகை மலையில் 12 மில்லி மீட்டரும், கிருஷ்ணராயபுரத்தில் 49 மில்லி மீட்டரும், மாயனூரில் 42 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 14.4 மில்லி மீட்டரும், கடவூரில் 6.2 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் 12.4 மில்லி மீட்டரும், மயிலம்பட்டியில் 15 மில்லி மீட்டர் என மொத்தம் மாவட்டத்தில் 234.20மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 19.52 மில்லி மீட்டர் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags

Next Story