கரூர் மாரியம்மன் திருவிழா - பக்தர்கள் பால்குட ஊர்வலம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு 44-ம் ஆண்டு பால்குடம் எடுக்கும் விழா நடைபெற்றது.

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் வைகாசி மாத திருவிழா வரும் மே மாதம் 12ஆம் தேதி துவங்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் ஸ்ரீ மாரியம்மன் பூச்செரிதல் விழா குழுவினர் மற்றும் டிசி இளைஞர் நற்பணி மன்றத்தினர் நடத்திய 44-ம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரசிம்மபுரம், நடுத்தெரு, ரத்தின விநாயகர் கோவில் வளாகத்தில் இருந்து புறப்பட்ட பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மாரியம்மன் கோவிலை அடைந்தது. கோடையின் தாக்கம் அதிகம் உள்ளதால் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு தண்ணீரை ஊற்றி குளிர்வித்தனர். பால்குடம் விழா கமிட்டியினர் கோவில் அருகே வந்தபோது, பக்தி அருளால் பால்குடம் தலையில் சுமந்து பக்தி ஆட்டம் ஆடினர். நிகழ்ச்சியின் நிறைவில் பால்குடம் எடுத்து வந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர்.

Tags

Next Story