கரூர் மாநகராட்சி ஊழியரை சஸ்பெண்ட் செய்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாநகராட்சி ஊழியரை சஸ்பெண்ட் செய்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை

தூக்கிட்டு தற்கொலை 

கரூர் மாநகராட்சி ஊழியரை சஸ்பெண்ட் செய்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு.
கரூர் மாநகராட்சி ஊழியரை சஸ்பெண்ட் செய்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை. காவல்துறை வழக்கு பதிவு. கரூர் அடுத்த வெண்ணைமலை சந்தைதெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் வயது 39. இவர் தற்போது வெண்ணமலை அருகே உள்ள பசுபதிபாளையம் அண்ணாமலை நகரில் வசித்து வந்தார்.இவரது மனைவி தவமணி வயது 30. கார்த்திகேயன் கரூர் மாநகராட்சியில் ரெக்கார்ட் கிளர்க்காக கடந்த 14 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அண்மைக்காலமாக இவர் பணிக்கு முறையாகச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பிப்ரவரி 27ஆம் தேதி அன்று மாநகராட்சி நிர்வாகம் கார்த்திகேயனை சஸ்பெண்ட் செய்தது. இதனால் விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த கார்த்திகேயன், மார்ச் 21ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில், தற்போது வசித்து வரும் அண்ணாமலை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்று இருந்த அவரது மனைவி மாலை வீடு திரும்பிய போது, தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார் தவமணி. மேலும் இது குறித்து காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த கார்த்திகேயன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.

Tags

Next Story