புதுமணப்பெண் மாயம் - கணவன் புகார்

காவல் நிலையம்

கரூர் மாவட்டம், வெங்கமேடு, பெரிய குளத்து பாளையம், பாரதியார் தெருவை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சதீஷ் வயது 34. இவருக்கும் மல்லிகா வயது 26 என்ற பெண்ணுக்கும் பிப்ரவரி 25ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து ஒரு வாரம் முடிந்த நிலையில், மார்ச் 3-ம் தேதி மதியம் 1:30 மணி அளவில், வீட்டிலிருந்த மல்லிகா திடீரென மாயமானார்.
இளம் மனைவி மல்லிகா மாயமானதால், பதட்டம் அடைந்த சதீஷ், அக்கம் பக்கத்தாரிடமும், தனது உறவினர்களிடமும் மல்லிகா குறித்து விசாரணை மேற்கொண்டு தேடினார். ஆயினும் தனது மனைவி கிடைக்கப்பெறாததால், இது குறித்து வெங்கமேடு காவல் நிலையத்தில் தனது மனைவியை காணவில்லை என சதீஷ் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டு, மாயமான இளம்பெண் மல்லிகாவை தேடி வருகின்றனர்.


