சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி 7வது நாளாக ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி 7வது நாளாக ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்கள் போராட்டம்

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கரூரில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், மாவட்ட பொருளாளர் பிரபு தலைமையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக அரசு கூறியதை, நிறைவேற்ற வலியுருத்தியும், சென்னையில் DPI வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வரும், சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள், இடைநிலை ஆசிரியர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை கண்டித்தும், இத்தகைய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் 7-வது நாளாக நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சங்கரேஸ்வரி, கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட இடைநிலை ஆசிரியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story